Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி பள்ளி!

4

திருச்சியில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி பள்ளி!

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ரஞ்சிதபுரம் பகுதியை சேர்ந்தவர் சுமங்கலி சம்பத். இவர் கடந்த 6 வருடங்களாக தைமகள் கலைமன்றம்  சார்பில் மகளிருக்கான  இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.

முன்னதாக கம்ப்யூட்டர் பயிற்சி, யோகா வகுப்புகள் நடத்தி வந்த நிலையில் தற்போது இலவச தையல் பயிற்சி அளித்து வருகிறார்.
தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மூலம் தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

1

இங்கு 6  மாத கால பயிற்சியில் தையல் கலைஞர்களுக்கான அனைத்து விதமான பயிற்சிகளும் வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. இதுவரை 12 பிரிவுகளாக இலவச பயிற்சி வழங்கப்பட்டதன் மூலம் 1600 மகளிர் பயன்பெற்றுள்ளனர்.

3

திறம்படக்கற்று தேர்ந்த சிலர் பயிற்சி வழங்கும் வகையிலும் சுயதொழில் தொழில்முனைவோராகவும் உருவாகியுள்ளனர்.

தற்போது 12 வது குழுவினருக்கு சான்றிதழ் வழங்கும் விழா கடந்த 31/08/2022 தேதி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அடுத்த குழுவினருக்கு இலவச தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. விரும்புடையவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு
9751395944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தைமகள் கலைமன்ற நிறுவனர் சுமங்கலி சம்பத் தெரிவித்தார்.

2

Leave A Reply

Your email address will not be published.