
பொதுத் துறையைச் சோ்ந்த கெயில் (இந்தியா) நிறுவனம் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 28 சதவீதம் .
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான மனோஜ் ஜெயின் கூறியது:

சா்வதேச சந்தையில் எரிவாயு சந்தைப்படுத்துதலுக்கு நல்ல விலையும் பெட்ரோகெமிக்கல் வா்த்தகத்தால் லாபமும் கிடைத்துள்ளது.
இதுபோன்ற சாதகமான அம்சங்களின் காரணமாக 2020-2021-ன் 4வது காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 28% வளா்ச்சி அடைந்து ரூ.1,907.67 கோடியை எட்டியுள்ளது. 2019-20-இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.1,487.33 கோடி மட்டுமே.

கடந்த 2020-21 முழு நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) நிறுவனம் ஈட்டிய லாபம் 26% குறைந்து ரூ.4,890 கோடியானது. இதற்கு பொதுமுடக்கத்தின் தாக்கமே முக்கிய காரணம்.
விற்றுமுதலும் 21% சரிந்து ரூ.56,529 கோடியானது.
நிறுவன திறன் பயன்பாடு 100 % மேல் அதிகரித்ததால் பெட்ரோகெமிக்கல் விற்பனை 18 % அதிகரித்து 8,71,000 டன்னாக உயர்ந்தது.
இந்த ஆண்டில் ரூ.6,600 கோடியில் மூலதன செலவினங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.
