
பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு சொந்தமான, 800 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை, பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையை ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் பெற்றுள்ளது.

இந்த அலைக்கற்றையை பயன்படுத்திக் கொள்வதற்காக ரிலையன்ஸ் ஜியோ 1,005 கோடி ரூபாயை ஏர்டெல்லுக்கு வழங்கி உள்ளது. இது தவிர, வருங்காலத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஏற்படும் செலவினத்துக்கான 469 கோடி ரூபாயையும், ஜியோ ஏற்கும்.ஆந்திர பிரதேசம், டெல்லி, மும்பை ஆகிய மூன்று தொலை தொடர்பு வட்டங்களில் உள்ள அலைக்கற்றை வசதியை, ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து ஜியோ பெற்று உள்ளது.
