
அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜியோ..!
இந்தியாவில் குறைந்த விலையில் செல்போன்கள் வழங்கி செல்போன் சந்தையில் ஜியோ பல்வேறு அதிரடிகளை செய்து வந்தது ஜியோ. தற்போது டெலிகாம் துறையில் புதிய வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து புதிய வர்த்தகத்திற்காகக் களத்தில் இறங்கியுள்ளது.


‘ஜியோ எக்ஸ்குளுசிவ்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகளுடன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இப்புதிய ஜியோ எக்ஸ்குளுசிவ் திட்டத்திற்கு ஜியோ நிறுவனம் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ உடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஜியோ – வீவோ கூட்டணியில் ஸ்மார்ட்போன்கள் வாங்குவோருக்குத் தள்ளுபடி விலையில், ஜியோ இணைப்பு உடன் ளிஜிஜி சேவை, ஷாப்பிங் சலுகைகள், ஒரு முறை ஸ்கிரீன் மாற்றப்படும் சேவை ஆகியவை கிடைக்கும். தற்போது இத்தகைய சேவைகள் விவோ நிறுவனத்தின் சீ1ஷி போன்களுக்கு மட்டும் கிடைக்கிறது.
விவோ நிறுவனத்துடன் மட்டும் அல்லாமல் லாவா, கார்பன் மற்றும் இதர சீன பிராண்டுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இக்கூட்டணியில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் ரூ.8,000 ரூபாய் அளவீட்டில் இருக்கும் எனத் தெரிகிறது.
அத்துடன் இந்தியாவில் இருக்கும் பல கோடி பியூச்சர் போன் வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்கு மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் சீனாவின் ஐடெல் நிறுவனத்துடனான கூட்டணியில் ரூ.3,000 முதல் ரூ.4,000 மதிப்பீட்டில் 4ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யக் கூட்டணி அமைத்துள்ளது.
