Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஜிஎஸ்டி திருத்தம் : வியாபாரிகள் நிம்மதி

1

ஜிஎஸ்டி திருத்தம் : வியாபாரிகள் நிம்மதி

GST தொடர்பான சில சட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் முக்கியமான திருத்தங்களை குறித்து சுருக்கமாக பார்ப்போம்.

4

Section 16(2)(aa)

3

இந்த புதிய விதிப்படி, பொருளை விற்பனை செய்த / சேவையை வழங்கிய நிறுவனம் தனது பில்லை GST இணையதளத்தில் GSTR-1 ரிட்டர்ன் தாக்கல் செய்து அது வாங்கியவரின் GSTR-2A படிவத்தில் வெளியானால் மட்டுமே வாங்கியவர் Input Tax Credit (ITC) எடுக்க முடியும்.

இது வரை, அப்படி GSTR-2A வில் வராவிட்டாலும் அவரது கொள்முதல் படிவம் Purchase Register அடிப்படையில் ITC எடுத்து வந்தனர். பின்னர் Rule 36(4) எனும் புது விதி கொண்டு வரப்பட்டு GSTR-2A வில் உள்ள ITC உடன் கூடுதலாக 5% ITC எடுத்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது. இனி மேல் GSTR-2A வில் இருந்தால் மட்டுமே ITC எடுக்க முடியும்.

2

இது வாங்கியவர் மீது கூடுதல் சுமையை ஏற்றும். விற்பனை செய்தவர் ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் வாங்கியவர் ITC எடுக்க முடியாது. தன்னிடம் சட்டப்பூர்வமாக அனைத்து ஆவணங்கள் இருந்தாலும் ITC எடுக்க முடியாமல் பணமாக வரியை கட்ட வேண்டி வரும். அவரது Working Capital அடி வாங்கும். மேலும், இருக்கிற வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து, தனக்கு விற்பனை செய்தவர் ரிட்டர்ன் தாக்கல் செய்து விட்டாரா இல்லையா என தினமும் கண்காணித்து வரவேண்டும். அவரை ரிட்டர்ன் தாக்கல் செய்ய சொல்லி நினைவுறுத்தும் கடிதங்கள் அனுப்ப வேண்டும். இப்படி எல்லாம் மெனக்கெட்டு அவர் ரிட்டர்ன் தாக்கல் செய்தால் தான் ITC கிடைக்கும். அவர் தாக்கல் செய்ய தாமதிக்கும் காலம் வரை வாங்கியவர்களுக்கு சிக்கல் தான்.

ஒரு நிறுவனம் 50 பேர்களிடம் இருந்து பொருட்கள்/சேவைகள் வாங்கினால் அந்த 50 பேரை யும் கண்காணிக்க வேண்டும். பெரு நிறுவனங்கள் நிலை இதை விட மோசம். அவர்கள் ஆயிரக்கணக்கான நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள்/சேவைகள் பெறுகிறார்கள். அத்தனை பேரின் ரிட்டர்ன் தாக்கல் நிலவரத்தை இனி கண்காணிக்க வேண்டும். முறையாக ரிட்டர்ன் தாக்கல் செய்யாத விற்பனையாளர்கள் மேற்கொண்டு தங்களுக்கு வியாபாரம் நடக்காது என்கிற நிலைக்கு வரக்கூடும். பெரு நிறுவனங்கள் அப்படிபட்ட வரி தாக்கல் தாமதிக்கும் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் / சேவைகள் பெறுவதை நிறுத்தி கொள்ள கூடும்.

சிறுநிறுவனங்கள், ஒரு மாதத்தில் விற்பனை செய்த அனைத்து பொருட்களுக்கும் உரிய வரியை 20 நாளுக்குள் அரசிடம் கட்ட வேண்டும் என்கிற நிலையை பார்த்தால் நிதிப்பற்றாக்குறை, விற்பனை செய்யப்பட்டதற்கான தொகை 60 நாட்களுக்கு பிறகு கிடைப்பது, அதனால் வரி கட்ட வாங்க வேண்டிய கடன் என தொழிலின் முக்கிய தேவையான உற்பத்திக்கு தேவையான working capital  கிடைக்காமல் வரியை மட்டுமே கட்டி கொண்டு இருக்க நேரும். எந்த ஒரு நிறுவனம், தனது வாடிக்கையாளர் பணம் தரும் வரை தனது சொந்த காசை போட்டு வரி கட்டி வரும் அளவுக்கு நிதி நிலை ஆதாரம் கொண்டு இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே இனி தாக்கு பிடிக்க முடியும்.

Section 35(5) நீக்கம் & Section 44 திருத்தம்
இதன் படி ஒவ்வொரு ஆண்டும் Annual Return ஆடிட்டர்களிடம் கொடுத்து certify செய்து வாங்கி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இனி இல்லை. அவரவர் கணக்கை அவரவர்களே சரிபார்த்து Self Assessment முறையில் தாக்கல் செய்தால் போதும்.

இது மிக மிக நல்ல முடிவு. ஆடிட்டர்களின் தேவையற்ற கெடுபிடிகள், வியாபாரத்தை/உற்பத்தியை சரிவர புரிந்து கொள்ளாமல் ஆடிட்டர்கள் அவர்களாக கற்பிதம் செய்து கொண்டு கேட்கும் கேள்விகளுக்கான விடை தேடல்கள், ஆடிட்டர்களுக்கு கொடுக்க வேண்டிய மிக அதிகமான கட்டணம் ஆகிய அனைத்து பிரச்சனை களில் இருந்தும் விடுதலை.

Section 50 திருத்தம்
இது வரை வட்டி கட்டும் போது மொத்த தொகைக்கும் வட்டி கட்ட வேண்டும் என்று இருந்ததை திருத்தி இனி நிகர தொகைக்கு மட்டும் வட்டி கட்டினால் போதும் என்று மாற்றப்பட்டு உள்ளது. இதுவும் நல்ல முடிவே.!

5

Leave A Reply

Your email address will not be published.