Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சாலையோரம் நின்றுகொண்டிருந்த காரில் கைவரிசை! நகை பணம் அபேஸ்!

1

சாலையோரம் நின்றுகொண்டிருந்த காரில் கைவரிசை! நகை பணம் அபேஸ்!

சென்னை கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 51). இவர் குடும்பத்துடன் சாமி கும்பிடுவதற்காக  சென்னையில் இருந்து காரில்  ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கருப்பசாமி கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.

4
2

இந்தநிலையில் நள்ளிரவில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வளநாட்டை பகுதியில்  சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளனர். அச்சமயத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த 42 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

3

கண்விழித்து பார்த்து போது பின் அதிர்ச்சி அடைந்த கருப்பசாமி வளநாடு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து  மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

5

Leave A Reply

Your email address will not be published.