Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் மயக்க ஜூஸ் கொடுத்து முதியவரிடம் பணம் நகை கொள்ளை!

1

திருச்சியில் மயக்க ஜூஸ் கொடுத்து முதியவரிடம் பணம் நகை கொள்ளை!

திருச்சி மேல சிந்தாமணி பாலாஜி அவன்யூ பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (65). இவர் திருச்சி உறையூர் பகுதியில் வசித்து வரும் தன்னுடைய மகள் வீட்டிற்கு  செல்வதற்காக சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

4

அச்சமயத்தில் அங்கிருந்த மர்ம நபர் வாங்கிக் கொடுத்த குளிர்பானத்தை குடித்துள்ளார் ‌. பின்னர் பஸ்ஸில் ஏறி அமர்ந்துள்ளார்.

3
2

சிறிது நேரத்திற்கு பிறகு கண்விழித்த ரங்கராஜ் தான் மயங்கியது தெரியவந்தது, மேலும்,  கையில் அணிந்து இருந்த 1 பவுன் மோதிரம் ரூ. 4000 மற்றும் செல்போன் ஆகியவை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து  கொடுத்து பணம் நகையை திருடி சென்றது தெரிய வந்தது ‌‌

இதுகுறித்து ரங்கராஜ்  அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

போலிசாரின் பாதுகாப்பும், மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.