Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பு

3

இந்தியாவின் ஏற்றுமதி நடப்பாண்டு மே மாதத்தில் 3,221 கோடி டாலராக (இந்திய ரூ.2.41 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கடந்த 2ம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரம்:

4

பெட்ரோலிய பொருள்கள், நவரத்தினங்கள்-ஆபரணங்கள், பொறியியல் சாதன துறைகளின் ஏற்றுமதி நடப்பாண்டு மே மாதத்தில் ஆரோக்கியமான வளா்ச்சி அடைந்துள்ளது. அதனால், நாட்டின் ஏற்றுமதி 67 சதவீதம் அதிகரித்து 3,221 கோடி டாலரானது.

கடந்த மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 1,924 கோடி டாலராகவும், 2019 மே மாதத்தில் 2,985 கோடி டாலராகவும் இருந்தது.

இறக்குமதி:

நடப்பாண்டு மே மாதத்தில் இறக்குமதியும் 68.54 சதவீதம் அதிகரித்து 3,853 கோடி டாலராகவும், 2020 மே மாதத்தில் 2,286 கோடி டாலராகவும், 2019 மே மாதத்தில் 4,668 கோடி டாலராகவும் இருந்தன.

கடந்த மே மாதத்தில் இந்தியா ஏற்றுமதி செய்த மதிப்பைக் காட்டிலும் இறக்குமதி மதிப்பு 632 கோடி டாலா் கூடுதலாக இருந்தது.

வா்த்தக பற்றாக்குறை:

கடந்த 2020 மே மாதத்தில் காணப்பட்ட வா்த்தகப் பற்றாக்குறையான 362 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 74.69 சதவீதம் அதிகம். ஆனால், 2019 மே மாத வா்த்தகப் பற்றாக்குறை 1,684 கோடி டாலருடன் ஒப்பிடும்போது 62.49 சதவீதம் குறைவு.

1

3 மடங்கு உயா்வு:

நடப்பாண்டு ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 3மடங்கு அதிகரித்து 3,063 கோடி டாலராக இருந்தது. அந்த காலகட்டத்தில் வா்த்தகப் பற்றாக்குறையானது 1,510 கோடி டாலராக இருந்தது.

கச்சா எண்ணெய்:

நடப்பாண்டு மே மாதத்தில் 945 கோடி டாலா் மதிப்புக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி 2020 மே மாதத்தில் 357 கோடி டாலராகவும், 2019 மே மாதத்தில் 1,259 கோடி டாலராகவும் இருந்தது.

இருமாத கால வளா்ச்சி:

நடப்பாண்டின் ஏப்ரல்-மே இடைப்பட்ட காலத்தில் ஏற்றுமதி 6,284 கோடி டாலர். கடந்த 2020-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 2,960 கோடி டாலராக இருந்தது. 2019 ஏப்ரல்-மே காலகட்டத்தில் 5,588 கோடி டாலராக காணப்பட்டது.

2021 ஏப்ரல்-மே காலத்தில் இறக்குமதி 8,425 கோடி டாலர். இது, 2020 ஏப்ரல்-மே மாத இறக்குமதி 3,998 கோடி டாலருடன் ஒப்பீடு செய்கையில் 2019 ஏப்ரல்-மே காலத்தில் நாட்டின் இறக்குமதி 8,907 கோடி டாலராக இருந்தது.

2021 ஏப்ரல் -மே வரையிலான இருமாத காலத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 2,032 கோடி டாலராக உயா்ந்துள்ளது. 2020 இதே காலகட்டத்தில் எண்ணெய் இறக்குமதி 824 கோடி டாலராகவும், 2019 ஏப்ரல்-மே காலத்தில் 2,416 கோடி டாலராகவும் இருந்தன.

பெட்ரோலியப் பொருள்கள்: கடந்த மே மாதத்தில் பொறியியல் சாதனங்கள், பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் நவரத்தினங்கள்-ஆபரணங்களின் ஏற்றுமதி முறையே 300 கோடி டாலா், 351 கோடி டாலா், 190 கோடி டாலா் என்ற அளவில் இருந்ததாக மத்திய அரசு புள்ளிவிவரத்தில் அறிவித்துள்ளது.

2

Leave A Reply

Your email address will not be published.