
அதிகரித்த பிட்காயின் மதிப்பு
மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் சர்வதேச நாணய சந்தையில் ஆயிரக்கணக்கான கிரிப்டோ கரன்சிகள் ஆட்சி செய்கிறது. அதில் முதல் இடத்தில் இருப்பது பிட்காயின். 2017-ம் ஆண்டில் ஒரு பிட்காயின் மதிப்பு 20,000 டாலர்களாக இருந்தது.


பின்னர் இதன் மதிப்பு 10,000 டாலர்களுக்கு கீழ் சென்றது. இதனால் முதலீட்டாளர்கள் பாதிப்படைந்தனர். கடந்த நவம்பர் மாதம் பிட்காயின் பரிவர்த்தனை மதிப்பு 34,000 டாலர்களை எட்டிய நிலையில் சமீபத்தில் இதன் மதிப்பு 40,000 டாலர்களை எட்டியது.
நமது நாட்டில் பிட்காயின் பரிவர்த்தனைக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் அளித்திருந்தாலும் பங்கு வர்த்தகத்தை செபி கண்காணிப்பது போல் இவற்றை கண்காணிப்பதற்கான அமைப்பு இந்தியாவில் இது வரை நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே பிட்காயின் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பிட்காயின் மதிப்பு உயர்ந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
