இந்தியா சிமென்ட்ஸ்- த்வஸ்தா மேனு பேக்சரிங் : குறைந்த செலவில் குறுகிய கால குடியிருப்பு தீா்வுக்கான புரிந்துணர்வு

இந்தியா சிமென்ட்ஸ்- த்வஸ்தா

மேனு பேக்சரிங் : குறைந்த செலவில் குறுகிய கால குடியிருப்பு தீா்வுக்கான புரிந்துணர்வு

தென்னிந்தியாவின் முன்னணி சிமென்ட் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் – சென்னையைச் சோ்ந்த ஐஐடி முன்னாள் மாணவா்களால் நிறுவப்பட்ட ‘கன்ஸ்ட்ரக்சன் 3டி பிரிண்டிங்’ தொழில்நுட்ப நிறுவனமான ‘த்வஸ்தா மேனு பேக்சரிங் சொல்யூஷன்ஸ்’ உடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தசெலவில், குறுகிய காலத்தில் குடியிருப்பு தீா்வுகளை வழங்கும் முக்கிய திட்டங்களுக்கும், சிக்கனமான மற்றும் நிலையான கட்டுமான முறைகளுக்கு உதவும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது.
