Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் வாடிக்கையாளர் தின விழா கொண்டிய இந்தியன் வங்கி!

1

திருச்சியில் வாடிக்கையாளர் தின விழா கொண்டிய இந்தியன் வங்கி!

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் தின விழா நேற்று (17/08/2022) கொண்டாடப்பட்டது.

4
2

இதில்,கிளை மேலாளர் சுதர்சன் தலைமை தாங்கினார். மேலும் மண்டல மேலாளர் ஸ்ரீமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வங்கியின் சேவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

3

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்காக குறைந்த வட்டியில் பல கடன்களை வழங்கி வருகிறது, மேலும் சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் தனிநபர் கடன்  2 லட்சம் வரை எவ்வித சிக்கலும் இன்றி உடனடியாக வழங்கி வருகிறது. இது மட்டுமின்றி சிறு,குறு நிறுவனங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை பிணையம் இன்றி கடன் வழங்கப்பட்டு வருகிறது  இதனை வாடிக்கையாளர் மற்றும் தொழில் முனைவோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.

இதனையடுத்து வாடிக்கையாளர்களிடம் குறைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.

5

Leave A Reply

Your email address will not be published.