Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பங்கு சந்தையில் ஈடுபட ஆர்வமா..! தொடர் 1

1

பங்கு சந்தையில் ஈடுபட ஆர்வமா..!

பங்குசந்தை தொழிலானது உடல் உழைப்பு இல்லா தொழில். பிற தொழில்களை விட இதில் மனஅழுத்தம் அதிகரிக்கும். பொறுமையும், நிதானமும் வேண்டும். சேமிப்பு போக உபரி பணம் வைத்திருப்போர், ஓய்வு பெற்றோர், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், மனஅழுத்த குறைபாடு இல்லாதவர்கள் பங்குவர்த்தகத்தில் ஈடுபடலாம்.

4

பங்கு வர்த்தகத்தில் ஈடுபட நினைப்பவர்கள் முதல் காரியமாக ரூ.10,000, ரூ.20,000 என பணத்தை எடுத்துக் கொண்டு ஏதாவது ஒரு ஹோட்டல்களில் நடக்கும் வகுப்புகளுக்கு செல்வர். என்னைப் பொறுத்தவரை இது தவறான அணுகுமுறை என்பேன். ஒரு நாள் முழுக்க ஒரு ஹாலில் அமர வைத்து பங்கு வர்த்தகம் குறித்து மொத்த விபரங்களையும் வகுப்பெடுத்தால், வெளியே வரும் போது பல குழப்பமான கேள்விகள் மனதில் எழும். ஆனால் அதற்கான பதில்கள் கிடைக்காது. வழிகாட்டிகள் இன்றி பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. ஆனால் அந்த வழிகாட்டிகள் வகுப்பு எடுப்போராக இல்லாமல் களத்தில் விளையாடும் களப்பணியாளர்களாக (SHARE BROKERS) இருக்க வேண்டும்.

3

பங்கு வர்த்தகத்தில் ஈடுபட நினைப்பவர்கள் முதல் கட்டமாக அது பற்றிய அடிப்படை அறிவு தெரிந்து கொள்ள அதற்குரிய புத்தகங்கள், இணைய தளங்களில் படிக்கலாம். ஓரளவு புரிந்த பின் நேரடியாக பங்கு சந்தையில் உள்ள இடைத்தரகர்களை அணுகினால் அவர்கள் வர்த்தகம் செய்ய ஒரு டிமேட் கணக்கு தொடங்கச் செய்வார்கள். அந்த கணக்கில் நீங்கள் வகுப்பிற்காக ஒதுக்கி வைத்த அந்த ரூ.10,000த்தை டெபாசிட் செய்யலாம்.

நிறுவனங்கள் புதிய தொழில் உற்பத்தியை தொடங்குகையில், வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு பதிலாக தனது கம்பெனி மதிப்புகள், சொத்துக்களை பிரித்து பொதுமக்களிடம் சிறு பங்குகளாக பிரித்து செய்திதாள் மற்றும் மீடியா மூலம் பொதுமக்களிடம் அறிவித்து விற்பனையை நேரடியாக செய்யும். பொதுவாக ஒரு பங்கின் விலை ரூ.10 அல்லது ரூ.100 ஆக இருக்கலாம். இது போல் கோடிக்கணக்கில் பங்கு பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
நீங்கள் முதல்கட்டமாக 500 அல்லது 1000 ரூபாய்க்கு இடைத்தரகர்களின் வழிகாட்டுதல்படி பங்குகளை வாங்கலாம். அப்படி வாங்கும் போது தரகரிடம் அதற்கான காரண காரியத்தை கேளுங்கள். அவர்கள் கொஞ்சம் சொல்லித் தருவார்கள்.

2

பொதுவாக இந்தியாவில் பங்குகள் குறித்த முழுமையான அறிவு 2 சதவீத மக்களிடம் மட்டுமே உள்ளதாக ஒர் ஆய்வறிக்கை கூறுகிறது. அவர்கள் பெரும்பாலும் புரோக்கர்களாக இருப்பார்கள். பங்கு வர்த்தக பரிவர்த்தனைகள் சில நேரங்களில் புரியாத புதிராக, எரிச்சல், வேதனைகள் நிறைந்து காணப்படும். எனவே எதற்கும் தயார்நிலை, மனஉறுதி, அவசரமின்மை, பயமின்மை, சாதிக்க வேண்டும் என முயற்சி உள்ளவர்களுக்கு இங்கு சரியான லாபத்தை நிச்சயம் தரும். குறிப்பாக இணையதளத்தில் ரம்மி விளையாடுவோர், செஸ் விளையாடுவோர் வரப் போகும் நிகழ்வுகள் குறித்த கணிப்பினை சிந்திக்கும் திறனுடையவர்களாக இருப்பர். அவர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டால் பெரும் லாபம் பார்க்கலாம்.

தினமும் உங்களின் புரோக்கர் அலுவலகம் சென்று பங்கு சந்தை குறித்து நிலவரங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தினை மட்டும் முழுமையாக கேட்டு அறிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து பங்குகளை வாங்குவதும், விற்பதுவும் என இருந்தால் மட்டுமே அவற்றின் ஏற்ற இறக்கங்களுக்கான காரணம் புரியும். தெளிவு கிடைக்கும். புரோக்கர் அலுவலகத்திற்கு அடிக்கடி நீங்கள் செல்லும் போது ஏராளமான முதலீட்டாளர்கள் அங்கே இருப்பார்கள். அவர்கள் பேசுவதன் மூலம் பங்கு பரிவர்த்தனைகள் குறித்த தெளிவு கிடைக்கும்.

பொதுவாக புரோக்கர்கள் பங்குகள் குறித்த FUNDAMENTAL ANALYSIS கற்றுத் தரமாட்டார்கள். TECHNICAL ANALYSIS மட்டுமே கற்றுத் தருவார்கள். காரணம் அதனால் மட்டுமே தினமும் நாம் பங்குகளை வாங்கி விற்பனை செய்வோம். இதில் பெரும்பாலும் SHORT TERM பங்குகளை மட்டுமே வாங்க வலியுறுத்துவார்கள். அதனால் அவர்களுக்கு கமிஷன் கிடைக்கும். நாம் LONG TERMபங்கு பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது அவர்களின் வருவாயை குறைக்கும். சரி அது என்ன FUNDAMENTAL ANALYSIS, TECHNICAL ANALYSIS..?

அது பற்றி நாம் அடுத்த இதழில் பார்ப்போம்..!

எஸ்.முத்துக்குமார்,
வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர்,
கோகிலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

5

Leave A Reply

Your email address will not be published.