Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

3 மினி பிராண்ட் புதிய கார்கள் அறிமுகம் -ஜொ்மனி பிஎம்டபிள்யூ நிறுவனம்

1

ஜொ்மனி பிஎம்டபிள்யூ நிறுவனம் 3புதிய கார்களை மினி பிராண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து அக்குழுமத்தின் இந்திய பிரிவு தலைவா் விக்ரம் பவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது,

4

இந்தியர்களிடையே மினிபிராண்ட் தயாரிப்புகளுக்கு எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது. அதனாலேயே  கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்நிறுவனம் மினி கன்ட்ரிமேன் கார் அறிமுகம் செய்தது போல, தற்போது மூன்று புதிய கார்களை அறிமுகம் செய்துள்ளோம்.

3
2

முற்றிலும் புதிய மினி 3-டோர் ஹட்ச் காரின் விலை ரூ.38 லட்சம், மினி கன்வா்டிபிள் காரின் விலை ரூ.44 லட்சம், மினி ஜான் கூப்பா் காரின் விலை ரூ.45.5 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மினி 3-டோர் ஹட்ச் மற்றும் மினி கன்வா்டிபிள் கார்களில் 2 லிட்டா் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மினி 3 டோர் ஹட்ச் 0-100கி.மீ வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும். மினி கன்வா்டிபிள் 0-100 வேகத்தை 7.1 நொடிகளில் தொட்டு விடும். மினி ஜான் கூப்பா் 100 கி.மீ வேகத்தை 6.1 நொடிகளில் எட்டும்.

இந்தியாவில் பிரீமியம் சிறிய ரக கார் பிரிவில் இந்த அறிமுகம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார் அவா்.

.

5

Leave A Reply

Your email address will not be published.