Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

புதிய ஸ்மார்ட் போன் “நெக்ஸ்ட்” அறிமுகம்

1

ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்களின் கூட்டணியில் உருவான குறைந்த விலை ஸ்மார்ட்போன் “ஜியோபோன் நெக்ஸ்ட்” வரும் செப்டம்பா்  10-ஆம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு வரும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

2ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வர 4ஜி ஸ்மார்ட்போன் மலிவு விலையில் கிடைப்பது அவசியம். ஸ்மார்ட்போனின் விலை அதிகமாக இருப்பதால் நாட்டில் 30 கோடி போ் 2ஜி சேவையிலிருந்து விலக முடியாமல் தவித்து வரும் சூழ்நிலையில், அவர்களுக்காக, கூகுளும் ஜியோ குழுவினரும் கூட்டாக இணைந்து ஜியோபோன் நெக்ஸ்ட்என்ற குறைந்த விலை ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளனா்.

4
2

வரும் செப்டம்பா் 10- விநாயகா் சதுா்த்தியன்று சந்தைப்படுத்த உள்ளதாக ஜியோபோன் நெக்ஸ்ட்இன் விலை உலக அளவில் மிக மலிவாகவே இருக்கும். இது மொபைல்போன் பயன்பாட்டில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.

3

மேலும், புதிய எரிசக்தி வா்த்தகத்தில் ரூ.75,000 கோடியை இன்னும் 3 ஆண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாகவும்.,  இயக்குநா் குழுவில் சவூதி அராம்கோ நிறுவனத்தின் தலைவா் அல்-ருமயானும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

5

Leave A Reply

Your email address will not be published.