Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வோடபோனில் முதலீடு – திட்டமிடும் ‘அமேசான்’

1

வோடபோனில் முதலீடு –

திட்டமிடும் ‘அமேசான்’

4

‘வோடபோன் ஐடியா’ நிறுவனத்தில், ‘அமேசான்’ 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக செய்திகள் வந்ததை அடுத்து, இந்நிறுவன பங்கின் விலை, நேற்று, கிட்டத்தட்ட 5 சதவீதம் அதிகரித்தது.

3
2

இந்தியாவின் ‘கிளவுடு’ சேவையில், தொலை தொடர்பு நிறுவனத்தின் கூட்டு இல்லாமல் இருக்கும் ஒரே நிறுவனம் அமேசான்.

அதே போல், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு இல்லாமல் இருக்கும் ஒரே தொலைதொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா உள்ளது.

‘கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட்’ போன்ற தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், ‘ரிலையன்ஸ் ஜியோ’ மற்றும் ‘ஏர்டெல்’ ஆகியவற்றின் கிளவுடு வணிகத்தில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், அமேசான் முதலீட்டை மேற்கொள்ளும்பட்சத்தில், வோடபோன் ஐடியா அதன் கடன்களை அடைப்பதற்கும்; ஜியோ, ஏர்டெல் ஆகியவற்றுடனான போட்டியை வலுப்படுத்தவும் வாய்ப்புகள் கூடும்.

5

Leave A Reply

Your email address will not be published.