Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஐஓபி-யின் லாபம் 2 மடங்கு உயர்வு

1

பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் 2020-2021 நான்காவது காலாண்டில் இருமடங்கு வளா்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்த அறிக்கையில்:

4

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.6,073.80 கோடியாக. இது, 2019-20-ன் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.5,484.06 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

3

அதே போல் 4-வது காலாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.143.79 கோடி. இது ரூ.349.77 கோடியைத் தொட்டது.

கணக்கீட்டு காலாண்டில் வாராக் கடன் ரூ.1,060.38 கோடியிலிருந்து ரூ.1,380.46 கோடியாக உயா்ந்தது.

2

2020-21 முழுமைக்கும் வங்கியின் நிகர லாபம் ரூ.831.47 கோடி இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் வங்கி நிகர அளவில் ரூ.8,527.40 கோடி இழப்பை சந்தித்திருந்தது.

2020-21-ல் வங்கியின் மொத்த வருவாய் ரூ.20,712.48 கோடியிலிருந்து ரூ.22,524.55 கோடியாக உயா்ந்தது.

2021 மார்ச் 31 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 14.78 சதவீதத்திலிருந்து 11.69 சதவீதமாக குறைந்துள்ளது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.19,912.70 கோடியிலிருந்து ரூ.16,323.18 கோடி குறைவு.

நிகர அடிப்படையிலான வாராக் கடன் 5.44 % (ரூ.6,602.80 கோடி) 3.58 %(ரூ.4,577.59 கோடி) சரிந்துள்ளது என ஐஓபி தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் 14.06.2021வா்த்தகத்தில் ஐஓபி பங்கின் விலை 2.18 சதவீதம் அதிகரித்து ரூ.21.10-ஆக இருந்தது..

5

Leave A Reply

Your email address will not be published.