Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஐடிசி நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,817 கோடி

1

ஐடிசி நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.3,816.84 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது

இதன் பங்குச்சந்தை நிலவரம்:

4

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் நிறுவனம் ஈட்டிய வருமானம் ரூ.15,404.37 கோடி. இது, கடந்த நிதியாண்டான 2019-20 –ல் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.12,560.64 கோடியை விட அதிகம்.

3

2021 ஜனவரி-மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,816.84 கோடி. 2020 ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்த லாபம் ரூ.3,926.46 கோடி.

2

2020 ஜூலை 27-இல் சன்ரைஸ் ஃபுட் நிறுவனத்தை ஐடிசி  விலைக்கு வாங்கியது. எனவே, நிதிநிலை செயல்பாட்டில் அந் நிறுவன வருவாயும் அடங்கும் என்பதால் நான்காம் காலாண்டு முடிவுகளை ஒப்பீடு செய்ய இயலாது.

2020-21 நான்காம் காலாண்டில் ஐடிசியின் மொத்த செலவினம் ரூ.10,944.64 கோடி..

கணக்கீட்டு காலாண்டில் எஃப்எம்சிஜி வா்த்தகத்தின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் ரூ.10,203.23 கோடி. இது, 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.8,940.78 கோடியை விட அதிகம்.

கடந்த 2020-21 முழு நிதியாண்டின் நிகர லாபம் ரூ.13,389.80 .அதேசமயம், 2019-20 நிதியாண்டின் லாபம் ரூ. 15,584.56 கோடி.

2021 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு ரூ.1 முகமதிப்பு கொண்ட பங்குகளுக்கு இறுதி ஈவுத்தொகையாக ரூ.5.75 வழங்கப்படும் என இயக்குநா் குழு  தெரிவித்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.