
‘ஜஸ்ட் டயல்’ நிறுவனத்தின், 40.95 % பங்குகளை, 3,497 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ்’ நிறுவனம், கையகப்படுத்த உள்ளது.

இதன் மூலம் ஜஸ்ட் டயல் நிறுவனம் ரிலையன்ஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் வி.எஸ்.எஸ்.மணி பணிகளை தொடருவார்.

இந்த கையகப்படுத்துதல், பங்குதாரர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதல் பெற்ற பின் நடைமுறைப்படுத்தப்படும்.
