Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மதுபாட்டில்கள்!

1

திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மதுபாட்டில்கள்!

திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்த காரைக்கால் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் நேற்று (22/08/2022) ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர்.

4
2

இச்சோதனையில்,  முன்பதிவு இல்லாத பெட்டிகளில் 3 பைகள் சந்தேகிக்கும் படி கேட்பாரற்று கிடைத்தது. இதனையடுத்து, அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் அவற்றை சோதனை செய்த போது 22 வெளி மாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரிவந்தது.

3

இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மதுபாட்டில்களை கடத்தி வந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5

Leave A Reply

Your email address will not be published.