Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மதா்சன் சுமி சிஸ்டம்ஸின் லாபம் 8 மடங்கு அதிகரிப்பு

1

மோட்டார் வாகன உதிரிபாக தயாரிப்பின் முன்னணி நிறுவனமான மதா்சன் சுமி சிஸ்டம்ஸ் 4வது காலாண்டில் 8 மடங்கு லாபம் ஈட்டியுள்ளது.  அந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை நிலவரம்:

 

நடப்பாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் 8 மடங்கு அதிகரித்து ரூ.1,018.69 கோடியாகும் இது முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.135.66 கோடியை விட 8 மடங்கு அதிகம்.

4

இதேகாலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருவாய் ரூ.14,434.48 கோடியிலிருந்து ரூ.16,971.91 கோடியாக உயா்ந்துள்ளது.

3
2

மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2020-21-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,294.44 கோடியிலிருந்து ரூ.1,569.37 கோடியாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், ஒட்டுமொத்த வருமானம் ரூ.60,728.99 கோடியிலிருந்து ரூ.57,369.91 கோடியாக குறைந்துள்ளது.

ஈவுத்தொகை: கடந்த 2021 நிதியாண்டுக்கு ரூ.1 முகமதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.1.50 (150 %) ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு முடிவு செய்துள்ளது.

பங்குச் சந்தையில் 03.06.2021 வா்த்தகத்தில் மதா்சன் சுமி சிஸ்டம்ஸ் நிறுவனப் பங்கின் விலை 6.91 சதவீதம் சரிந்து ரூ.250.50-ஆக இருந்தது.

5

Leave A Reply

Your email address will not be published.