
திருச்சியில் மஹிந்திரா நிறுவனம் சார்பில் புதிய ரக வாகனங்கள் அறிமுக விழா!
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட புதிய ரக டிரக், கார்கோ, டிப்பர் ரக வாகனங்கள் அறிமுக விழா திருச்சி SRM ஹோட்டலில் நடைபெற்றது. திருச்சி SJB ஆட்டோமொபைல்ஸ் பொதுமேலாளர் ரமேஷ் தலைமையில் நடந்த இந்த விழாவில் மஹிந்திரா நிறுவன மண்டல தலைமை அதிகாரி கார்த்திகேயன் போஸ் வாகனத்தை அறிமுகப்படுத்தி பேசினார்.

விற்பனை பிரிவு தலைமை அதிகாரி முத்துக்குமார் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசினார். அப்போது புதிய ரக அறிமுக வாகனங்கள் சிறந்த மைலேஜ் தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. திருப்தி இல்லை என்றால் திருப்பி தந்து விடலாம் என்று நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேறு சில சிறிய அளவிலான சரக்கு வாகனங்களில் இல்லாத அளவுக்கு இத்தாலிய டிஸைன், மஹிந்திராவின் நம்பிக்கையான இஞ்சின், டிரைவர் கேபின் மேம்படுத்த பட்டு கூடுதல் வசதிகள், காற்றோட்டம், ஓய்வெடுக்கும் அளவில் இடவசதி, கட்டுமான பொருட்கள், பால்கேன், சிலிண்டர், காய்கறிகள் என அனைத்தும் கொண்டு செல்லும் வகையில் வேறு ஆல்ட்ரேசன் செய்ய தேவையில்லாத வகையில் 8 பில்லர் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.
மேலும் குறுகிய வளைவுகள், ஹேர்பின் வளைவு, எஸ் வடிவ வளைவுகளை சிறந்த முறையில் கையாள முடியும், Wide Spread திறன் கொண்ட இந்த வாகனங்களுக்கு 3 ஆண்டு அல்லது 3 லட்சம் கிலோமீட்டர் வாரண்டி உள்ளது என்றார்.
மேலும் IMAXX எனப்படும் டெலிமேட்டிக்ஸ் கண்ட்ரோல் மூலம் வாகனத்தின் ஒவ்வொரு நகர்வையும் துல்லியமாக அறிய முடியும். இது உலகத்தரம் வாய்ந்த ஒரு தொழில் நுட்பம் என்று தெரிவித்தனர். புதிய வாகனங்கள் பதிவு செய்தவர்களுக்கு வாகனம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மஹிந்திராவின் நிறுவன அதிகாரிகள் SJB ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், நிதி நிறுவன அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
