
மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் கார் விற்பனை 71சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏப்ரல் மாத விற்பனை 1,59,691-லிருந்து மே மாதம் 46,555 ஆக குறைந்துள்ளது. இது 71சதவீத வீழ்ச்சியாகும்.

ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட சிறிய ரக கார் விற்பனை 81 சதவீதம் சரிவடைந்து 25,041 லிருந்து 4,760 ஆனது.

ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையர் விற்பனை 72,318-லிருந்து 72 சதவீதம் குறைந்து 20,343 ஆனது.
செடான் சியாஸ் விற்பனை 1,567 லிருந்து 349 ஆக குறைந்தது. விட்டாரா பிரீஸ்ஸா, எஸ்-கிராஸ், எர்டிகா விற்பனை 25,484லிருந்து 75 சதவீதம் வீழ்ச்சியடைந்து 6,355 ஆனது.
ஏற்றுமதியும் 35 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
