
ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து போரட்டகளத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினர்!
திருச்சி முடுக்குப்பட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல வருட காலமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென்று திருச்சி ரெயில்வே நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் உள்ள வீடுகளில், ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பதால் காலி செய்யுமாறு ஒட்டப்பட்டது.


இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரெயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து முடுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எதிா்ப்புத் தெரிவித்து வகையில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றினா்.
இந்நிலையில் சிபிஐஎம் பொன்மலைப்பகுதி செயலா் விஜயேந்திரன் தலைமையில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில், முடுக்கப்பட்டு பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்தை ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
