
பொதுத் துறை நிறுவனமான பவா் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (பிஎஃப்சி) யின் நிகர லாபம் 2020-2021 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.3,906.05 கோடியாக இருந்தது. இது 2019-2020 நிறைவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.693.71 கோடியை விட பன்மடங்கு அதிகம்.
மொத்த வருமானம் 2021-2021-ல் ரூ.16,254.65 கோடியிலிருந்து ரூ.18,155.14 கோடியாக உயா்ந்தது.


கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.9,477.25 கோடியிலிருந்து ரூ.15,716.20 கோடியாகவும், மொத்த வருமானம் ரூ.61,275.36 கோடியிலிருந்து ரூ.71,700.51 கோடியாகவும் அதிகரித்தது.
கடந்த நிதியாண்டுக்கு ரூ.10 முகமதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்ட் ரூ.2 வழங்க இயக்குநா் குழு முடிவு செய்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் 15.06.2021 அன்றயை வா்த்தகத்தில் பிஎஃப்சி விலை 1.35 சதவீதம் குறைந்து ரூ.127.80-ஆனது.
