Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

முத்தூட் ஃபைனான்ஸின் லாபம் ரூ.1,024 கோடி

1

முத்தூட் ஃபைனான்ஸ் நான்காவது காலாண்டில் ரூ.1,023.76 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

அந் நிறுவனத்தின் பங்குச் சந்தை நிலவரம்

4

பொதுமக்களிடையே தங்க நகை கடனுக்கான தேவை அதிகரித்துள்ளது. தொடர்ந்து, ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காம் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.3,118.97 கோடியாக உயா்ந்துள்ளது. இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் வருமானமான ரூ.2,633.58 கோடியை விட அதிகம்.

3
2

வட்டி மூலமாக கிடைத்த வருவாய் மட்டும் ரூ.2,562.96 கோடியிலிருந்து ரூ.3,029.82 கோடியாக அதிகரித்துள்ளது.

வருவாயில் காணப்பட்ட கணிசமான முன்னேற்றத்தையடுத்து நான்காம் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.835.75 கோடியிலிருந்து 22.5 சதவீதம் உயா்ந்து ரூ.1,023.76 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2020-21 நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.3,168.68 கோடியிலிருந்து ரூ.3,818.88 கோடியாக அதிகம்.  மொத்த வருவாய் ரூ.9,683.98 கோடியிலிருந்து ரூ.11,566.41 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு 200 சதவீத (ரூ.20) ஈவுத்தொகையை முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் குழு அறிவித்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.