Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

9 மடங்கு லாபம் ஈட்டிய நால்கோ

1

நேஷனல் அலுமினியம் நிறுவனத்தின் (நால்கோ) மார்ச் காலாண்டு லாபம் 9 மடங்கு ஏற்றம் கண்டு ரூ.935.74 கோடியானது..

2020-21-ஆம் நிதியாண்டில் கரோனாவின் தாக்கம் உச்சத்திலிருந்து குறைந்து இரண்டாவது அரையாண்டில் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கத் தொடங்கியதன் எதிரொலியாக கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2,874.47 கோடியை தொட்டது. இது 2019-20-ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தின் ரூ.2,047.27 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகம்.

2
4

மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய ஒட்டுமொத்த லாபம் ரூ.100.51 கோடியிலிருந்து 9 மடங்கு ஏற்றம் கண்டு ரூ.935.74 கோடியை எட்டியது என நால்கோ தெரிவித்துள்ளது.

மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்னா அந்தஸ்து பெற்ற நால்கோ நிறுவனம் அலுமினா, அலுமினியம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மிகப்பெரிய நிறுவனமாகும்.

5

Leave A Reply

Your email address will not be published.