
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.40 கோடியில் புதிய கட்டிடம்!
திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ள ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை இணைத்து 100 வார்டுகளாக உயர்ந்தவும், அடுத்த ஓராண்டுக்குள் மாநகராட்சி எல்லை விரிவாக்க பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இதனையடுத்து, மாநகராட்சி மைய அலுவலகத்தில் ரூ.40 கோடி செலவில் தற்போது உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு பின்புறம் புதிய கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்தில் 100 கவுன்சிலர்கள் உட்காரும் வகையில் பெரிய கூட்டு அரங்கம் மற்றும் இதர அலுவலகங்களும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை விரைந்து தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
