
வெண்ணெய் கிடைக்கல…. டெல்லி வாசிகள் புலம்பல்….
குடிநீர் தட்டுப்பாடு, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு அரிசி தட்டுப்பாடு என்றெல்லாம் கேள்விப்பட்டு இருப்போம் . ஆனால் வெண்ணெய் தட்டுப்பாடு என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா…

தலைநகர் டெல்லியில் தான் இந்த பிரச்சனை தற்போது நிலவி வருகிறது. பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையில் வெண்ணையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் பால் உற்பத்தியாளர்களிடம் போதிய அளவில் வெண்ணெய் உற்பத்தி இல்லாததால் பொதுமக்களுக்கும் பேக்கரி கடைகளுக்கும் தேவையான வெண்ணெய் சப்ளை செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குஜராத் ,ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து பால் உற்பத்தி பொருள்கள் டெல்லிக்கு வருவது வழக்கம். ஆனால் அந்த மாநிலங்களில் தற்போது கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள தோல் நோய்க்காரணமாக பால் உற்பத்தி குறைந்து பால் தொடர்பான உப பொருள்கள் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் வெண்ணெய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பால் உற்பத்தி பொருட்கள் குறைந்த அளவில் அனுப்பப்படுகின்றன.
டெல்லியில் நிலவும் தட்டுப்பாடு குறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறும்போது ஒரு நாளைக்கு 1000 பெட்டிகள் வரை வெண்ணெய் தேவைப்படும் என்ற நிலையில் தற்போது 300 இருந்து 500 பெட்டிகள் மட்டுமே கிடைக்கிறது. கிறிஸ்மஸ் புத்தாண்டு போன்ற பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் வெண்ணெய் உள்ளிட்ட பால் உற்பத்தி பொருள்கள் தான் பிரதான இடத்தை வகிக்கின்றன.
ஆனால் இந்த பொருட்களில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கேக் உள்ளிட்ட இதர பொருள்களின் உற்பத்தியும் பாதிக்கிறது என்றனர்.
அவனவன் பிரச்சனையை அவன் அவனுக்கு…
