
வர்த்தகத்தில் இல்லை பங்காளிச் சண்டை!
எல்லை தகராறு செய்து கொண்டாலும் இந்தியாவுக்கு சீனா 12-வது பெரிய வர்த்தக கூட்டாளி நாடாக இன்றளவும் விளங்கி வருகிறது. இந்திய அரிசி சீனாவில் அதிகளவில் விற்பனையாகி வருகிறது என்பதை சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இந்தாண்டு நவம்பர்-2020 வரை இந்தியாவில் இருந்து சீனாவுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதி 16 சதவீதம் உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு நேரத்திலும், சீனாவுக்கு ஏற்றுமதி அதிகரித்தே இருந்தது. சீனாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்திருந்தாலும் வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாகவே இருக்கிறது.
கடந்த 2019-ல் இந்தியா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 10 ஆண்டுகளில் முதல் முறையாக குறைந்தது. நடப்பாண்டில் சீனாவில் இருந்து இந்தியா 59 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. ஆனால், இந்தியாவிலிருந்து சீனா 19 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது.
