Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

குப்பை கழிவிலிருந்து எரிவாயு தயாரிக்க அணு விஞ்ஞானி திருச்சியில் ஆய்வு!

1

குப்பை கழிவிலிருந்து எரிவாயு தயாரிக்க அணு விஞ்ஞானி திருச்சியில் ஆய்வு!

 

திருச்சி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் , டெல்டா மாவட்டங்களில் பாசன தேவைக்காகவும் உள்ள காவிரி ஆற்றில் மாசு அதிகரித்து வருகிறது.  மாநகரத்திற்குள் ஓடும் உய்யகொண்டான் வாய்க்கால், அரியாறு , கோரையாறு குடமுருட்டி ஆறுகளிலும் அருகிலுள்ள குடியிருப்புகள், உணவங்களிலிருந்து கழிவுநீர் கலந்து வருகின்றன.

4

இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வேண்டுகோளை ஏற்று சென்னையை சேர்ந்த அணு விஞ்ஞானி பேராசிரியர் டேனியல் செல்லப்பா நேற்று(26.08.2022) திருச்சிக்கு வந்து முதல் கட்ட ஆய்வு பணிகளை தொடங்கினார் .

3
2

திருச்சிமேலச் சிந்தாமணி மற்றும் காவிரி உள்ளிட்ட நீர் நிலைகளில் கழிவு நீர் கலக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டார் . இதனையடுத்து,  திடக்கழிவுகள் சேகரிக்கப்படும் இடங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டார் .

இந்த ஆய்வின் அறிக்கை குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அடுத்த மாதம் தெளிவரை வழங்க இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டல உதவி செயற்பொறியாளர் பாலு, பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர் கந்தசாமி, குடிநீர் வழங்கல்துறை உதவி செயற்பொறியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

5

Leave A Reply

Your email address will not be published.