Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் பொது மக்களிடையே ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு 

1

திருச்சியில் பொது மக்களிடையே ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு 

போஷான் அபியான் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பாக வருடந்தோரும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் பொது மக்களிடையே ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சி, சக்தி மற்றும் பாதுகாப்பு தரும் உணவுகள் அடங்கிய விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் நேற்று (12.09.2022) தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்

4
2

பிறந்து 6 மாதம் முடிவடைந்த பத்து குழந்தைகளுக்கு அமுதுாட்டும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர்  துணை உணவு வழங்கப்பட்டது. பிறகு அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் நோக்கில் பேரிச்சம் பழம், கடலை மிட்டாய், பழங்கள் மற்றும் நெய் அடங்கிய ஊட்டச்சத்துப் பெட்டகம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

3

இதனைத் தொடர்ந்து, அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அவர்களின் மையத்தில் ஊட்டச்சத்து தோட்டத்தினை அமைக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்  ஊட்டச்சத்து தரும் கீரை செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பொன்னான ஆயிரம் நாட்கள், இரத்த சோகை, தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றிய ஆலோசனை மற்றும் இக்குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பொ.ரேணுகா, வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் கௌசல்யா மற்றும் சாய்ராபானு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

5

Leave A Reply

Your email address will not be published.