Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஆயில் இந்தியா நிறுவன நிகர லாபம் ரூ.847.56 கோடி

1

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத் துறை கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஆயில் இந்தியா, கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், அதன் விற்றுமுதல் ரூ.3,909.61 கோடி. 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்ட விற்று முதலான ரூ.3,583.72 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

ஆனால், நிகர லாபம் ரூ.925.65 கோடியிலிருந்து 8% குறைந்து ரூ.847.56 கோடியானது.

4

2021-22 காலாண்டில் ஒவ்வொரு கச்சா எண்ணெய் பேரல் சுத்திகரிப்பு மூலமாக கிடைக்கும் லாபம் 5.18 டாலரிலிருந்து 59.80 டாலராக அதிகரித்தது.

3
2

2021 ஜனவரி-மார்ச் காலாண்டில் எண்ணெய் உற்பத்தி 5.28 % குறைந்து 0.72 மில்லியன் டன் ஆனது. எரிவாயு உற்பத்தியிலும் அதிக மாற்றமின்றி 0.649 மில்லியன் கியூபிக் மீட்டராகவே இருந்தது.

2019-20- நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.2,584.06 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.  2020-21 நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை குறைவும் நிறுவனத் நிகர லாபம் ரூ.1,741.59 கோடியாக குறைவதற்கு வழிவகுத்தது. என ஆயில் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆயில் இந்தியாவின் பங்கு மூலதனம் 80.16 %  உயா்ந்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.