Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஓஎன்ஜிசியின் நிகர லாபம் ரூ.6,734 கோடி

1

பொதுத் துறை ஆயில் அண்ட் நேச்சுரல் கியாஸ் கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) கடந்த நிதியாண்டின் 2020 ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் நிறுவனம் விற்பனையின் வாயிலாக ரூ.6,734 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இதற்கு, கச்சா எண்ணெய் விலை மற்றும் எதிர்பாரா வருவாய் அதிகரித்ததே முக்கிய காரணம்.

ஆனால் 2020 ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் ரூ.3,214.41 கோடி இழப்பை சந்தித்தது. பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் மூலமாக கிடைக்கும் ஆதாயம் கணக்கீட்டு காலகட்டத்தில் 49.01 டாலரிலிருந்து 58.05 டாலராக அதிகரித்துள்ளது.

4

கரோனா பேரிடரின் தாக்கத்தால் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.5% குறைந்தது அதேபோன்று, கியாஸ் உற்பத்தியும் 8.4 % சரிந்தது.

3

நடப்பு நிதியாண்டில், 22.56 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.

2

2020-2021 நான்காவது காலாண்டில், மொத்த வருவாய் 1.2% குறைந்து 21,189 கோடியாக இருந்தது.

கடந்த 2020-21 நிதியாண்டின் லாபம் 16.5 % குறைந்து ரூ.11,246 கோடியானது. மொத்த வருவாயும் 29.2 % குறைந்து ரூ.68,141 கோடியானது.

கடந்த நிதியாண்டுக்கு வழங்கப்படும் மொத்த டிவிடெண்ட் ரூ.3.60-ஆக அதிகரித்துள்ளது என ஓஎன்ஜிசி தனது அறிக்கை கூறியுள்ளது.

பங்குச் சந்தை 25ம் தேதிய வா்த்தகத்தில் ஓஎன்ஜிசி பங்கின் விலை 0.94 % குறைந்து ரூ.120.90-ஆனது.

5

Leave A Reply

Your email address will not be published.