Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கடந்த மார்ச் மாதத்தில் பயணியர் வாகன விற்பனை சரிவு

1

கடந்த மார்ச் மாதத்தில் பயணியர் வாகன விற்பனை, 4.87 சதவீதம் சரிவடைந்து, 2 லட்சத்து 71 ஆயிரத்து 358 ஆக குறைந்துள்ளது.

அதேபோல் இரு சக்கர வாகன விற்பனை, 4.02 சதவீதம் சரிவடைந்து, 12 லட்சத்து 6,191லிருந்து 11 லட்சத்து 57 ஆயிரத்து 681 ஆக குறைந்துள்ளது.

4

அதே சமயம் வர்த்தக வாகன விற்பனை, 14.91 சதவீதம் உயர்ந்து 67ஆயிரத்து 828லிருந்து, 77 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது.

3
2

மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையும், 26.61 சதவீதம் ஏற்றம் கண்டு, 38 ஆயிரத்து 135லிருந்து 48 ஆயிரத்து 284 ஆக உயர்ந்துள்ளது.இ

ஒட்டுமொத்த வாகன விற்பனை, 2.87 சதவீதம் குறைந்து 16 லட்சத்து 19 ஆயிரத்து 181 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

ரஷ்யா–உக்ரைன் போர், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் பயணியர் வாகனம் மற்றும் இரு சக்கர வாகன விற்பனை குறைந்துஉள்ளது என முகவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.