Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி விமான நிலையத்தில் வெகு நேரமாக காத்துகிடந்த பயணிகள் 

4

திருச்சி விமான நிலையத்தில் வெகு நேரமாக காத்துகிடந்த பயணிகள் 

திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜாவில் இருந்து காலை 10.50 மணிக்கு வந்தடையும். பின்னர் மீண்டும் மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு குவைத் நோக்கி புறப்பட்டு செல்லும்.  நேற்று இவ்விமானத்தில் பயணம் செய்ய 158 பயணிகள் காலை 9.30 மணியில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தனர். இந்நிலையில் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வரவில்லை.

3

இதுகுறித்து  விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் கேட்டபோது, சார்ஜாவில் இருந்து விமானம் தாமதமாக வருகிறது. மாலை சுமார் 4 மணியளவில் விமானம் வந்தவுடன் குவைத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கூறி  விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் உள்ள தங்கும் விடுதி மற்றும் திருச்சி கலையரங்கம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

1

மாலை 4 மணிக்கு பின்னரும்  திருச்சிக்கு வர வேண்டிய விமானம் சார்ஜாவில் இருந்து புறப்படவில்லை என்பதை அறிந்த பயணிகள், போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மேலும் விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முன்னறிப்பு இன்றி   நீண்ட நேரம் காத்திருத்த பயணிகள் பெரும் சிரமத்து உள்ளாகினர்.

2

Leave A Reply

Your email address will not be published.