
திருச்சியில் கல்லூரி மாணவர்களிடையே காவல்துறையினர் போதை பொருள் விழிப்புணர்வு!
திருச்சி மாநகரில் போதை பொருட்களை ஒழிக்கும் பொருட்டு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவு படியும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) அவர்களின் வழிகாட்டுதலின் படியும்
நேற்று மாலை (22/08/2022) மாலை 6.00 மணிக்கு எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ச.பாலகிருஷ்ணன் அவர்களால்
சாரநாதன் இன்ஜினியரிங் கல்லூரியல் மாணவ மாணவியர்களுக்கு போதை விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

இதில், கஞ்சா, குட்கா போன்ற போதை தரும் பொருட்களை பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநிலையில் ஏற்படும் பாதிப்புகளை குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்தும் பெண்களின் பாதுகாப்பிற்காக காவலன் உதவி அப்ளிகேஷன் பயன்பாடு குறித்தும், அது எவ்வாறு பொதுமக்களுக்கும் மற்றும் பெண்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது என்பதையும் மாணவ மாணவியருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.

சுமார் 180 மாணவ மாணவியர் Drive Against Drugs உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர், உதவி பேராசிரியர்கள் செந்தில்குமார் மற்றும் முருகானந்தம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்
