Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி முகாம் சிறையில் கைதிகள் போராட்டம்!

1

திருச்சி முகாம் சிறையில் கைதிகள் போராட்டம்!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாமில் தங்கியுள்ள கைதிகள் செல்போன் மற்றும் கூர்மையான ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 150-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக சிறை முகாமில் சோதனை மேற்கொண்டனர்.

2
4

இச்சோதனையில் 150 க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து பறிமுதல் செய்த செல்போன்களை தரக்கோரி கைதிகள் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (22/08/2022)அங்குள்ள மரங்களில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3

கைதிகளிடம் போலீசார் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

5

Leave A Reply

Your email address will not be published.