Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் சிறப்பு முகாமில் தொடரும் தற்கொலை போராட்டம்! 

4

திருச்சியில் சிறப்பு முகாமில் தொடரும் தற்கொலை போராட்டம்! 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகள்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலைக்கோரி அடிக்கடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3

இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன் மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு அகதிகளிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

1

இதனைக்கண்டித்து, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முகாமில் உள்ள மரங்களில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில், மீண்டும் நேற்று மாலை 4 மணிக்கு மேல் அகதிகள் 13 பேர் அளவுக்கு அதிகமான மாத்திரரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். முகாம் வாசிகள் மயங்கியதையடுத்து. அவர்களை மீண்ட போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2

Leave A Reply

Your email address will not be published.