Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

குடியிருப்பை பறிக்கும் ரயில்வே நிர்வாகம்! கொந்தளித்த மக்கள்!

4

குடியிருப்பை பறிக்கும் ரயில்வே நிர்வாகம்! கொந்தளித்த மக்கள்!

திருச்சி முடுக்குப்பட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல வருட காலமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென்று திருச்சி ரெயில்வே நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் உள்ள  வீடுகளில், ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பதால்  காலி செய்யுமாறு ஒட்டப்பட்டது.

3

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரெயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து நேற்று முடுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, கடந்த பல வருட காலமாக இங்கு வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது ஆகையால் தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய நடடிவக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

2

Leave A Reply

Your email address will not be published.