Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தடையின்றி உதவித்தொகை பெற சுயவிவரங்களை சரிபார்க்க விவசாயிகளுக்கு வேண்டுகோள்!

1

தடையின்றி உதவித்தொகை பெற சுயவிவரங்களை சரிபார்க்க விவசாயிகளுக்கு வேண்டுகோள்!

2

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது . இத்தொகையானது வேளாண் இடுபொருள்கள் வாங்கும் வகையில் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தில் 1,45,000 விவசாயிகளுக்கு மேல் பயனடைந்து வருகின்றனர் .

4

வருகிற ஆகஸ்ட் முதல் 12 ஆவது தவணை தொகை கொடுக்கப்பட உள்ளது. இத்தொகையினை  பெற ஏதுவாக விவசாயிகள்  தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு பயனாளிகள் அருகிலுள்ள பொது சேவை மையத்தை அணுகி பி.எம். கிசான் வலைதளத்தில் தங்களது சுயவிவரத்தை பதிவேற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

5

Leave A Reply

Your email address will not be published.