
திருச்சியில் காருக்கு ஆசைப்பட்டு ரூ.8 லட்சம் பணத்தை இழந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்!
திருச்சி திருவரம்பூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி பெருமாள் (68). ஓய்வு பெற்ற அரசு மருத்துவரான இவர் சமீபத்தில் ஆன்லைன் மூலம் ஒரு நிறுவனத்திடம் இருந்து பொருட்கள் வாங்கியுள்ளார்.

இதனைடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தாங்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கியதற்காக கார் பரிசாக விழுந்துள்ளதாக கூறி காரை பெற்றுக் கொள்வதற்காக ஒரு தொடர்பு எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த எண்ணை தொடர்பு கொண்டு போது காரை எடுத்துச் செல்ல வேண்டுமானால் ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட வகைகளுக்காக தாங்கள் பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நம்பிய சஞ்சய் பெருமாள் அவர்கள் கூறியபடி இரண்டு வங்கி கணக்குகளுக்கு ரூ. 8 லட்சத்து 34 ஆயிரத்து 621 பணத்தை தவணை முறையில் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் தவணை முடிந்த பின் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சஞ்சய் பெருமாள் இது குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
