
இந்தியாவின் ஓ.டி.டி., சந்தை, மிகப் பெரிய வளர்ச்சியை எட்டும் என்றும், இதன் அலை இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை நகரங்களிலிருந்து வரும். நெட்வொர்க் வசதி, டிஜிட்டல் இணைப்பு, ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றின் காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்படும் என, ‘ஆர்.பி.எஸ்.ஏ., அட்வைசர்ஸ்’ நிறுவன தனதுஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி உள்ளூர் மற்றும் பிராந்திய ஓ.டி.டி., நிறுவனங்களும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பெற்று வரும் நிலையில் ஓ.டி.டி., தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 46.27 கோடியாக அதிகரிக்கும்.
