Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தொடர் மழையால் திருச்சி காவிரி கொள்ளிட கரைகளில் வெள்ள அபாயம்!  

1

தொடர் மழையால் திருச்சி காவிரி கொள்ளிட கரைகளில் வெள்ள அபாயம்!  

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் காரணத்தால் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

4
2

இதனையடுத்து, காவிரி கொள்ளிட ஆற்றில் கடந்த 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி வரை முக்கொம்பு மேலணைக்கு, வினாடிக்கு 1 இலட்சத்து 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தடைந்தது. இது காவிரியில் வினாடிக்கு 41 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 95 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

3

தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் இரண்டு ஆறுகளும் கரைபுரண்டு பாய்கிறது. இதனையடுத்து 24 மணி நேரமும் நீர்வளத் துறை அதிகாரிகள் நீர்வரத்து மற்றும் வெளியேற்றத்தை கண்காணித்து ஆற்றங்கரை பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

5

Leave A Reply

Your email address will not be published.