
திருச்சியில் சாலை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமினை அமைச்சர் கே.என்நேரு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 97.69% நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். சாலை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் தற்போது வரை 242 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள சாலை பணிகள் மழை காலம் ஓய்த பிறகே மேற்கொள்ள இயலும். ஆகையால் பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக் கொள்ளுபடி கேட்டுக்கொண்டார். மேலும், சாலை பணிகளை உரிய நேரத்திற்குள் முடிக்க ஒப்பந்ததார்களுக்கு மாவட்ட ஆட்சியர், ஆணையர் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும், மேலும், உரிய நேரத்தில் முடிக்க தவரும் ஒப்பந்ததார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
