Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ரயில்வேயில் ரூ.56 கோடி கொள்ளை! நவீன முறையில் கைவரிசை காட்டிய பீகார் வாலிபர் கைது!

1

ரயில்வேயில் ரூ.56 கோடி கொள்ளை! நவீன முறையில் கைவரிசை காட்டிய பீகார் வாலிபர் கைது!

ரயில்வே தட்கல் முன்பதிவில் போலியான மென்பொருள் மூலம் முறைகேடு நடந்து வருவது தெரிய வந்தது. இதனையடுத்து, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை பிரிவில் உள்ள சைபர் பிரிவும் திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்பு படையும் இணைந்து கடந்து 18 மாதங்களாக ரயில்வே பயண சீட்டு முன்பதிவில் உள்ள தட்கல் முறையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பீகார், பாட்னா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று 18 இடங்களில் தொடர் விசாரணை மேற்கொண்டு நீண்ட மாதங்களுக்கு பிறகு  மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான கைலேஷ் யாதவ் (27) என்பவரை கைது செய்தனர்.

4
2

இந்நிலையில் போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து தட்கல் பயண சீட்டுகளை மிக விரைவில் முன்பதிவு செய்யும் மென்பொருள்களை வாங்கி பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு சுமார் 7000 டிக்கெட்டுகள் என மொத்தம் 18 மாதங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 460 தக்கல் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்து சுமார் ரூபாய் 56 கோடி வரை  கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

3

மேலும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் மென்பொருட்களை சட்டவிரோதமாக பலருக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இச்சம்பவங்களில் தொடர்புடைய 5 பேரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

5

Leave A Reply

Your email address will not be published.