Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வேளாண் பட்டதாரிகளுக்கு  ரூ.1 லட்சம் மானியம்!  மாவட்ட ஆட்சியர் தகவல்

1

வேளாண் பட்டதாரிகளுக்கு  ரூ.1 லட்சம் மானியம்!  மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2022-23ம் நிதியாண்டில் செயல்படுத்தபடும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துகளில் வேளாண் பொறியியல் பட்டம் பெற்ற  21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் 6 பேர் வேளாண் தொழில் முனைவோராக செயல்பட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

4
2

இதன் மூலம் பயனாளி தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் , வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்களை நிறுவ வேண்டும் . இதற்கு உட்கட்டமைப்பு நீங்கலாக அதிகப்பட்சமாக ரூ .1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.

3

எனவே தகுதியுள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் , தொடங்க உள்ள தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை , கல்வி சான்றிதழ்கள் , ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் அடுத்த மாதம் ( செப் டம்பர் ) 2 – ந் தேதிக்குள் அக்ரிஸ் நெட் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என  திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார் .

5

Leave A Reply

Your email address will not be published.