Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பெண்கள் மட்டுமே பணியாற்ற உள்ள ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம்..!

1

பெண்கள் மட்டுமே பணியாற்ற உள்ள ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையை அமைத்து வருகிறது . ஆரம்ப நிலையில் ஆண்டுக்கு 10 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

4
2

கட்டமைப்புப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, ஆண்டுக்கு 1 கோடி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் அளவில் உலகின் மிகப் பெரிய தொழிற்சாலையாக விளங்கும் என்று கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். இந்நிறுவனம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

3

“பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கில் இந்த முன்னெடுப்பை மேற்கொள்கிறோம். வாகனத் தயாரிப்புத் தொடர்பான பணிகளில் அவர்களுக்கு பயிற்சி வழங்க பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறோம்.

தயாரிப்பு முழுமையும் அவர்கள் பொறுப்பில் நடைபெறும். இங்கு தயாரிக்கப்படும் ஒவ்வொரு ஸ்கூட்டரிலும் அவர்களின் உழைப்பு இருக்கும்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5

Leave A Reply

Your email address will not be published.