Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 11 %  சரிவு

4

கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதி பற்றி மத்திய வா்த்தகம் அமைச்சகம் கூறிய தகவல்,

கரோனா பேரிடா், வெளிநாட்டு சந்தைகளின் மந்தநிலை காரணமாக கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் நாட்டின் கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 596 கோடி டாலா் (ரூ.43,717.26 கோடி). இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் இந்தியா ஏற்றுமதி செய்த கடல் உணவுப் பொருள்களின் மதிப்பான 668 கோடி டாலருடன் (ரூ.46,662.85 கோடி) ஒப்பிடுகையில் 10.88 சதவீதம் குறைவு.

3

தற்போதைய நிதியாண்டுகளில் இதன் ஏற்றுமதி அளவு 12,89,651 டன்னிலிருந்து 11,49,341 டன்னாக சரிந்துள்ளது.

1

கடந்த நிதியாண்டில் கடல் உணவுப் பொருள்களின் வருவாயில் பதப்படுத்தப்பட்ட இறாலின் பங்களிப்பு 74.31 சதவீதமாக இருந்தது. அதேபோல், அளவின் அடிப்படையில் 51.36 சதவீத பங்களிப்பை தந்துள்ளது.

இந்திய கடல் உணவுப் பொருள்களின் இறக்குமதி செய்து கொள்வதில் அமெரிக்கா 2,72,041 டன் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடா்ந்து சீனா (1,01,846 டன்), ஐரோப்பிய யூனியன் (70,133 டன்), ஜப்பான் (40,502 டன்), தென்கிழக்கு ஆசியா (38,389 டன்), மத்திய கிழக்கு நாடுகள் (29,108 டன்). அதற்கு அடுத்து இடத்தைபதப்படுத்தப்பட்ட மீன் பிடித்துள்ளதாக வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2

Leave A Reply

Your email address will not be published.