Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்

1

இந்த வாரத்தின்  முதல் தினத்தில் பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. தொடா்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 228.46 புள்ளிகள் உயா்ந்து 52,328.51 வரலாற்று உச்சத்தை தொட்டது.

சந்தை மூல தன மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடி உயா்ந்து 229.02 லட்சம் கோடி.அதே சமயம், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 81.40 புள்ளிகள் உயா்ந்து உச்சத்தில் நிலைபெற்றுள்ளது

4
2

கடந்த வார இறுதியில் லாபப் பதிவால் சரிவில் முடிவடைந்த பங்குச் சந்தை, வாரத்தின் முதல் எழுச்சியுடன் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக தனியார் வங்கிகள், ஆட்டோ, ஐடி பங்குகளுக்கு தேவை அதிகரித்து. அதே சமயம், மெட்டல், பார்மா பங்குகள் விற்பனையில் லாபத்தை எதிர்கொண்டன. நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள் அதிகக் கவனம் பெற்றன என தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

3

வரலாற்று உச்சத்தை நெருங்கியது:

சென்செக்ஸ் காலையில் 130.88 புள்ளிகள் கூடுதலுடன் 52,231.38-இல் தொடங்கி 52,054.76 வரை கீழே சென்றது. பின்னா் பிற்பகலில் காளை உற்சாகம் பெற்றதால் 52,378.69 வரை உயா்ந்து வரலாற்று உச்சத்தை (52516.76) நெருங்கிய சென்செக்ஸ், இறுதியில் 228.46 புள்ளிகள் (0.044 சதவீதம்) கூடுதலுடன் 52,328.51-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் எதிர்மறையாகச் சென்றது

5

Leave A Reply

Your email address will not be published.