
“வடக்கன்ஸ்களுக்கு” ஷாக் தகவல்.. சப்பாத்திக்கு வந்தது சோதனை…
இந்தியர்களின் பிரதான உணவு தானியங்களில் கோதுமை முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களில் கோதுமை அதிகளவில் நுகரப்படுகிறது. எனவே, கோதுமை விலை ஏற்ற இறக்கங்கள் விலைவாசியில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில், கடந்த ஒரே ஆண்டில் கோதுமை விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இந்தாண்டு நவம்பர் மாதம் வரை கோதுமை விலை சுமார் 23 சதவீதம் உயர்ந்துள்ளது.
மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:
2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் அகில இந்திய அளவில் கோதுமையின் சராசரி மொத்த விற்பனை விலை குவிண்டாலுக்கு 2,212 ரூபாயாக இருந்தது.
நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்தில் அகில இந்திய அளவில் கோதுமையின் சராசரி மொத்த விற்பனை விலை குவிண்டாலுக்கு 2,721 ரூபாயாக உயர்ந்துள்ளது.

2021ம் நிதியாண்டில் இந்தியாவின் கோதுமை உற்பத்தி 109.59 மில்லியன் டன்னாக இருந்தது.
2022 ம் நிதியாண்டில் கோதுமை உற்பத்தி 106.84 மில்லியன் டன்னாக குறைந்துவிட்டது.
அகில இந்திய அளவில் கோதுமை விளைச்சல் 2021ம் ஆண்டில் ஹெக்டேருக்கு 3,521 கிலோவில் இருந்து 2022ஆம் ஆண்டில் ஹெக்டேருக்கு 3507 கிலோவாக குறைந்துள்ளது.
இந்தியாவில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முக்கிய கோதுமை உற்பத்தியாளர்களாக இருக்கின்றன.
இந்த மாநிலங்களில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடுமையான வெப்ப அலை தாக்கியது. இதனால் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டது.
நடப்பு குறுவை சாகுபடி பருவத்தில் கோதுமை கொள்முதல் 187.92 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.
கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 433.44 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சப்பாத்திக்கும் சோதனையா…
